கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கருவூல அதிகாரி கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி ஏ. ராஜா கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.



இந்த சோதனையின் போது, கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவு கண்காணிப்பாளர் ஏ.ராஜா என்பவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்டார்.



சம்பவத்தின் விவரம்: கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், கடந்த மே 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது கிராஜுவிட்டி தொகையைப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவை அணுகினார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஏ.ராஜா, ₹2000 லஞ்சம் கேட்டுள்ளார்.



இது குறித்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான குழுவினர், சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கருவூலப் பிரிவின் கல்வி அதிகாரி ராஜாவை சந்தித்தார். ராஜா அந்த பணத்தை தனது மேஜை டிராயரில் வைக்குமாறு கூறினார். அதன்படி, சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் ₹2000 பணத்தை மேஜை டிராயரில் வைத்தார்.

உடனடியாக, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து, ₹2000 பணத்தை கைப்பற்றினர். லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏ.ராஜாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...