கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோபனரி சோதனைச் சாவடியில் தீவிர பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோபனரி எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.



கோபனாரி காவல் சோதனைச் சாவடியில் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், செவிலியர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு மற்றும் சிவராஜ் ஆகியோர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களில் பயணிப்பவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடல் நிலையை கண்காணித்து, பின்னரே கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, இந்த கண்காணிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெறும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...