யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.பி.வேலுமணி ஆறுதல் மற்றும் நிதி உதவி

கோவையில் யானை தாக்கி உயிரிழந்த தேவராஜ் மற்றும் கார்த்திக் குடும்பத்தினரை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதி உதவிகளையும் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டிருந்த யானை தீடீரென தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார் எஸ்.பி.வேலுமணி.

அதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கார்த்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இணைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யானை கார்த்திக்கைத் தாக்கத் துவங்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார்.

Newsletter

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...