பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி: கோவை ரயில்கள் 92 நாட்கள் நிற்காது

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கோவை உட்பட சில ரயில்கள் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை 92 நாட்களுக்கு அங்கு நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எர்ணாகுளம் ரயில் (எண்: 12677), எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ரயில்வே துறை பயணிகளுக்கு முன்கூட்டியே இந்த தகவலை தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயண திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...