போதைப் பொருள் கடத்தலுக்கு அரசு அதிகாரிகள் துணை போவதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமது முகநூல் பக்கத்தில் 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக காவல்துறை உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு, 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துணைபோனதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் Stalin அவர்களை நேரடியாக விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், "தமிழகம் போதையின் பிடியில் சிக்கியிருக்க, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று நீங்கள் எடுத்த உறுதிமொழி என்னவாயிற்று?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "தமிழகத்தில் ஒருபுறம் 'கஞ்சா வேட்டை' என்ற நாடகத்தை நடத்தும் உங்கள் அரசு, மறுபுறம் போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை நிற்கிறதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழகத்தில் பெருகிவரும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 850 அரசு அதிகாரிகளையும் விசாரித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தியுள்ளார் வானதி சீனிவாசன்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...