கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அரிய இருதய குறைபாடுடன் பிறந்த 7 நாள் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு அரிய இருதய குறைபாடு கண்டறியப்பட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

பிறந்து வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆம்புலன்சில் நடமாடும் வென்டிலேட்டர் மற்றும் உரிய மருத்துவ உபகரணங்களுடன் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் செவிலியரின் தொடர் மருத்துவ கண்காணிப்பில் குழந்தை திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் பிரத்தியேக பசுமை வழித்தடம் வழியாக கொண்டுவரப்பட்டது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வந்த குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு மருத்துவர் விஜய் சதாசிவம் தலைமையில், மருத்துவர் மேன்ப்பிரேட் பெர்னாண்டோ, மருத்துவர் நரேந்திரன் மேனன், மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னான மருத்துவ பராமரிப்பு மருத்துவர் சித்தார்த்த புத்தவரபு, மருத்துவர் தேவபிரசாத், மருத்துவர் சுஜா மரியம் ஆகியோர் மேற்பார்வையில், NICUவில் குழந்தை முழு கவனிப்பு மற்றும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தையை சரியான நேரத்தில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காக பசுமை வழித்தடத்தை திறம்பட ஒருங்கிணைத்த திருச்சி காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.



இந்நிலையில் இன்று, SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் மருத்துவ குழுவினர் இது தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். மருத்துவ குழுவினர் கூறுகையில், 100ல் ஒரு குழந்தைக்கு பிறவி இருதய குறைபாடு ஏற்படுவதாகவும் ஆண்டொன்றுக்கு 2,40,000 குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உரிய நேரத்தில் உரிய அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இருதய குறைபாட்டில் இருந்து குழந்தை பரிபூரண குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் கூறுகையில், அடிப்படையில் தான் ஒரு செவிலியர் என்றாலும் குழந்தையின் நிலையை அறிந்ததும் வேறெதுவும் யோசிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானதாக தெரிவித்தார். தனது குழந்தையை உரிய நேரத்தில் திருச்சியில் இருந்து கோவைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கும் தற்போது குழந்தையை கண்காணித்து வரும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தையுடன் வீடு திரும்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...