உடுமலையில் அற்புத அன்னை ஆலய தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை அற்புத அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய தேர் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் உள்ள அற்புத அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு செப மாலை, நவநாள், திருப்பலி, சிறப்பு தியான மறையுரை, நற்கருணை ஆராதனை மற்றும் வேண்டுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதி நாளான நேற்று காலை 8.30 மணிக்கு பங்குப்பெருவிழா திருப்பலி நடைபெற்றது.



இரவு 8 மணிக்கு தேர் பவனி வருதல் நிகழ்ச்சி தொடங்கியது.



அற்புத அன்னை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், பள்ளிவாசல் வீதி, தலை கொண்ட அம்மன் வீதி, தங்கம்மாள் ஓடை சாலை, பொள்ளாச்சி-உடுமலை சாலை, தளி சாலை வழியாக சுற்றி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.



பேண்ட் வாத்தியம் முழங்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேருக்கு முன்பு சிலுவை மற்றும் கைகளில் விளக்கு, மலர்கள் ஏந்தியவாறு பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வின் போது உடுமலை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...