சின்னியம்பாளையம் தங்கும் விடுதியில் காதலி கொலை: காதலன் கைது

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்டார். காதலன் சரவணன் கைது செய்யப்பட்டார். இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.


Coimbatore: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னியம்பாளையத்தில் உள்ள விடுதிக்கு செப்டம்பர் 13 அன்று ஒரு பெண்ணுடன் இளைஞரும் வந்து தங்கினர். மறுநாள் அதிகாலை இளைஞர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறியதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அறையை சோதனையிட்டபோது, இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஆர்.ஜி. புதூரைச் சேர்ந்த சரவணன் என்பதும், இறந்து கிடந்த பெண் கள்ளபாளையத்தைச் சேர்ந்த கீதா என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், இவர்கள் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இம்முறை தங்கியிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் குத்தி தலையில் அடித்ததில் கீதா இறந்துள்ளார். சரவணனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...