வீரபாண்டியில் மத்திய அரசு அச்சகத்தின் வழிப்பாதை இணைப்புக்கு அதிமுக கோரிக்கை

கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் மத்திய அரசு அச்சகத்தின் 15 அடி வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மத்திய அரசின் அச்சகத்திற்கு சொந்தமான 15 அடி அகல வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ் மற்றும் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் ஆகியோர் இணைந்து இன்று (செப்டம்பர் 14) இந்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பில் பெரியநாயக்கன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KVN. ஜெயராமன், நகர கழக செயலாளர்கள் M. ராம்தாஸ், K. குருந்தசாலம், துணை செயலாளர் N. ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழிப்பாதை இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதியின் வளர்ச்சிக்கும் உதவும் என்று அதிமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...