அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப்படுத்தியது போல் - கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தார். ஜிஎஸ்டி விதிப்பால் கொங்கு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு குறித்து விமர்சித்தார்.



கோவை: கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பாஜகவினர் வெளியிட்ட விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



கணபதி ராஜ்குமார் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு அழகு தமிழில் கோரிக்கையை பேசினார். பாஜகவினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார். அதேபோல், சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்," என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி.யால் தான். யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் நடக்கிறது. பிஸ்கட் 18%, தங்கத்திற்கு 3% விதித்த போது அறிந்துகொள்ளலாம் என யாருக்கான ஆட்சி என தெரிந்து கொள்ளலாம். அந்த வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா? அது தனிமனித சட்ட விதிமீறல். அந்த காட்சியை பார்க்கலாம், கற்காலத்திற்கு எடுத்து சென்றது போல் இருந்தது."

"அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியது போல் உள்ளது. ஜி.எஸ்.டி.யால் 30% தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டது. பெண்கள் சமூக நீதி பற்றி பேச தகுதி உள்ள கட்சி திமுக. பிரித்தால்வதே இவர்களின் வேலை. மதத்தால், ஜாதியால் பிரித்தவர்கள் தற்போது ஆண், பெண் பற்றி பேசுகிறார்கள். குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர். கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர்," என்று கூறினார்.

கணபதி ராஜ்குமார் மேலும் கூறுகையில், "அரசுக்கு எதிரான நிலை மத்திய அரசுக்கு எதிராக தான் தமிழகத்தில் இருந்தது. தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சி பற்றி பேசாமல் செய்த சாதனைகள் பற்றி பேசினோம், வெறுப்பரசியல் பேசக்கூடாது என்று முதல்வரின் ஆணைக்கினங்க பேசவில்லை. அவர் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு திமுக துணை நிற்கும். கொங்கு தமிழில் நன்றாக அனைவரையும் சென்றடையும் வகையில் பேசியது சமூக வலைதளத்தில் பரவியதும் காரணம்," என்றார்.

"மத்திய அரசால் தான் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு. வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை. முதல்வர் பங்கேற்ற மாணவர்கள் உதவி தொகை விழாவில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதல் வரிசையிலேயே இருக்கை கொடுத்தோம், நாங்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறோம்," என்று கூறி முடித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...