கோவையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா: 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படுவதாகவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் பாராட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருவது பெருமைக்குரியது என்றார். மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநகராட்சி ஆணையாளரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், மண்டலத் தலைவர்கள் K.A. தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாநகர கல்வி அலுவலர் R. குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...