கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ துவங்கியது. ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி, மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.



கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.



எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.



கோவை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.



வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற இலட்சக்கணக்கான மீன்களைக் கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி கோவை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் என பல்வேறு வகையான அரங்குகளை கோவை வாழ் மக்கள் காணும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...