ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி தொழில்நுட்பத் துறை சார்பில் "சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம்" என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனர்.



ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேனட் நிகழ்வினை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு இச்சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளிலும் சமபங்கு உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமூகம் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கென முன்னேற்றப்பாதையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சுய வேலைவாய்ப்பின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது பாராட்டுக்குறியது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, என்இஆர்டி சொசைட்டி தலைவர் சத்யஜோதி காமராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பல துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இச்சமூகத்தில் சமஉரிமை உள்ளது என்றார். மேலும் அவர் பெண்களின் முன்னேற்றம், பெண்கள் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகள், நபார்டு மூலம் பெண்களுக்கான வங்கிக் கடன், சுயஉதவிக் குழு பெண்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில், என்இஆர்டி சொசைட்டியின் முதன்மை மேலாளர் முத்துக்கண்ணன், மேலாளர் சரஷ்வதி, கிருஷ்ணா வுட்டன் ஆர்ட்ஸ் என்.விஜயகுமார் மற்றும் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கணினித் துறை தலைமை பேராசிரியர் எஸ்.ஜே.கே.ஜெகதீஷ்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...