கோவையில் காலாவதியான குளிர்பானம் விற்பனை: கடை உரிமையாளரை எதிர்த்த தம்பதியின் வீடியோ வைரல்

கோவை போத்தனூரில் உள்ள உணவகத்தில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்த தம்பதியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.


கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சாவிற்காக காத்திருந்தபோது, அருகிலுள்ள டீக்கடையில் கேக் மற்றும் மா (Maa) குளிர்பானம் வாங்கினர். குளிர்பானத்தை திறந்து குடிக்கும்போது அது கெட்டுப்போயிருப்பதை உணர்ந்தனர்.

கடையில் பணிபுரிந்த நபரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் குளிர்பானம் கெட்டுப்போகவில்லை என்றும், அதன் காலாவதி தேதி இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், அது சமீபத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்கச் சொன்னபோது, அதுவும் கெட்டுப்போயிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் பதிவு செய்த தம்பதியினர், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...