வால்பாறையில் கன மழை - மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு


வால்பாறை சுட்டுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் சுட்டுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், முடீசில் உள்ள ஆறு மற்றும் முடீஸ் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் முடீஸ் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் அருகாமையில் சாலையோரம் இருந்த சுமார் 80 வருடம் பழமைவாய்ந்த மரம் வேருடன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. தொடர்ந்து, அந்த மரம் சாலையில் விழுந்த நிலையில், அதன் அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்களும் காவல் நிலையத்தின் மீது விழுந்தது. அதிர்ஸ்டவசமாக இதில் எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.



இதனைத்தொடர்ந்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து அந்த மரத்தினை அகற்றினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...