உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி பொள்ளாச்சி நகர திமுக தீர்மானம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா கொண்டாட்டம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி, வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.



திமுக தலைமை அறிவித்தபடி திமுக பவள விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...