மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் வணங்கி அனுப்பிய சம்பவம்

மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையம் கிராமத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் யானையை வணங்கி அனுப்பிய சம்பவம் நடந்தது. வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் கிராமத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை வணங்கி அனுப்பிய சம்பவம் நடந்தது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.



நேற்று இரவு, கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கோத்தகிரி சாலையைக் கடந்து சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை காப்பு காடு பகுதிக்கு சென்றன. இதில் 'பாகுபலி' என அழைக்கப்படும் ஒரு காட்டு யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புகுந்தது.

திடீரென யானையைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிலர் சத்தமிட்டு யானையை விரட்ட முயன்றனர். அப்போது, கூட்டத்திலிருந்த ஒரு பெண், "சாமி என்று கையெடுத்து கும்பிடு, யானை போய்விடும்" என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் அனைவரும் "சாமி போய்விடு" என்று யானையைப் பார்த்து வணங்கினர்.

இதனைக் கேட்ட யானை, முன்னோக்கி வராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து, பாகுபலி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...