கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை பீளமேடு அருகே போலீசார் வாகன சோதனையின் போது 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் செப்டம்பர் 6 அன்று பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா கடத்தலில் ஈடுபட்ட வி.கே. ரோடு, ஏ.டி. காலனியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட முகேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.

கைதான நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோபெட் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...