தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்: தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று மகிழ்ச்சி

தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.



மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...