கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்க குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 708 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. செப்டம்பர் 9, 11 தேதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ளது. சிலைகளை கரைக்க குனியமுத்தூர் உள்ளிட்ட குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குனியமுத்தூர் உள்ளிட்ட முக்கிய குளக்கரைகளில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக மொத்தம் 3,500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), பாரத் சேனா மற்றும் பிற இந்து அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி குளம், குனியமுத்தூர், வெள்ளக்கிணறு மற்றும் முத்தண்ணங்குளம் ஆகிய இடங்களில் கரைக்கப்பட உள்ளன. இந்த இடங்களில் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.



குறிப்பாக, குனியமுத்தூர் குளக்கரையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.



விழா காலத்தில் எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...