விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் முந்தி விநாயகர் 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்கின்றனர்.



Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ சந்தன காப்பு மற்றும் 2 டன் மலர்களுடன், ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைகளுள் ஒன்றான, பிரசித்தி பெற்ற கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை 16 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை மட்டுமின்றி அன்டை மாவட்ட பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு வந்து அதிகாலை முதலே பக்தியுடன் முந்தி விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...