உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் விஜயின் 'கோட்' திரைப்படம் வெளியீடு. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் போட்டு கொண்டாடினர். 60 வயது முதியவர் விஜய் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லதாங்கி அனுஷம் திரையரங்கில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் இன்று வெளியானது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கில் விஜய் முதன்முதலாக தோன்றும் போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டை காட்சிகளின் போதும் ரசிகர்கள் தங்களை மறந்து திரையின் முன்பு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கோட்' திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் பாடலுக்கு 60 வயது முதியவர் ஒருவர் அசத்தலாக நடனமாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.



திரைப்படம் பார்த்து முடித்து வெளியே வந்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், "விஜய் நடித்த 68 படங்களில் இந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும், எதிர்பாராத திருப்பங்களும் மெய்சிலிர்க்க வைத்தன," என்றனர்.

மேலும், "அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத நடிப்பு திறமையை 'கோட்' படத்தில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்," என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...