குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி


கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பு இன்று கோவையில் உள்ள மூன்று குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள சங்கர நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை மற்றும் நாகராஜபுரம் சாலையில் உள்ள மூன்று குளங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அதனை தூர்வாரும் பணி நடபெற்று வருகிறது.



பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணிகளுக்கான நிதி உதவியை ரோட்டரி க்ளப் ஆப் கோயம்பத்தூர் சென்ட்ரல் மற்றும் ஜி.இ.ஆயில் நிறுவனங்கள் வழங்கின.



சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் இந்த குளங்களில் இன்று காலை பூஜை நடைபெற்றது. இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி க்ளப் சென்ட்ரல் தலைவர் மாணிக்கம், ஜி.இ.ஆயில் நிறுவனத்தின் அதிகாரி பல்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அடுத்த பருவமழையின் போது இந்த குளங்களில் நீர் தேங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...