மடத்துக்குளம் அருகே கணியூரில் தேனீக்கள் தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் திடீர் தேனீக்கள் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பள்ளிகள் முடிந்து மாணவ மாணவிகள் வீட்டுக்கு திரும்பும் வேளையில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மாணவர்களையும் தேனீக்கள் துரத்தி கொட்டியதால், குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் சாலைகளின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினர்.

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டியது.



ஒரு முதியவரை தேனீக்கள் தேடித்தேடி கொட்டியதாகவும், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற செல்ல முடியாத அளவிற்கு தேனீக்கள் சூழ்ந்ததாகவும் தெரிகிறது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...