கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 24.08.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். சமுதாயக் கழிப்பிடம், மழைநீர் வடிகால், அம்மா உணவகம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம், வார்டு எண்.50க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா (2.0) (Swachh Bharat Mission-SBM) திட்டத்தின்கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடம் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டார்.





வார்டு எண்.60க்குட்பட்ட உப்பிலிபாளையம், காவலர் குடியிருப்பு, ராஜுவ்காந்தி நகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் 330 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் மற்றும்



வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.



மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





மேலும், அம்மா உணவகத்தின் உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடுகளையும் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.





கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் நிழற்கூடம் அமைப்பதற்கு உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.





உக்கடம் பெரியகுளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளுக்கு ஹிட்டாச்சி வாகனத்தில் சல்லடைவாளி பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, ஆகாயத்தாமரைகளை விரைவாக அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



வடக்கு மண்டலம், வார்டு எண்.26க்குட்பட்ட கணபதி மோர் மார்க்கெட் சத்தி பிரதான சாலை பகுதியில் உள்ள சிறுபாலம் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும்,





கணபதி, கணேஷ் லே-அவுட் பகுதியில் 177 மீட்டர் தொலைவிற்கும், நடராஜ்கவுண்டர் வீதியில் 220 மீட்டர் தொலைவிற்கும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், நகர் நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள் முத்துச்சாமி(கிழக்கு), ஸ்ரீதேவி(வடக்கு), (பொ)இளங்கோவன்(தெற்கு), செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் ராஜேஸ்கண்ணா, எழில், கனகராஜ், சவிதா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா சேரலாதன், சிவா, மோகன், சரண்யா, கற்பகம், பிரவின்ராஜ், சித்ரா தங்கவேல், மண்டல சுகாதார அலுவலர் (பொ) சந்திரன், உதவி பொறியாளர்கள் கணேசன், கல்யாணசுந்தரம், ஜெகதீஸ்வரி, இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...