பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் வைல்டு விங் டிரஸ்ட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான வைல்டு விங் டிரஸ்ட், வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுப்புறத் சூலளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்களின் கல்விக்காகவும், இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து பசுமை புரட்சியினை மேற்கொள்ள வைல்டு விங் டிரஸ்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வைல்டு விங் டிரஸ்ட் சரவணன் சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமார் 8000 ஆயிரம் செடிகளை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வளர்த்து வருகிறோம். இதில் 23 வகைச் செடிகள் நம் நாட்டுச் செடிகள் ஆகும். இவை மூன்று மாதத்தில் சுமார் 6 அடி வரை வளர்ந்து விடும். 

பின் இதனை வரும் மழைக்காலத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஆயிரம் செடிகளுக்கும் குமரகுரு கல்லூரி நிர்வாகமே இடத்தினை ஒதுக்கி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். 

எங்களது இந்த முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்களும் சிறந்த முறையில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

வைல்டு விங் டிரஸ்ட்-யின் இந்த பசுமை புரட்சி முயற்சி வெற்றி பெறவும், இந்த பூவுலகம் பசுமையடைந்து வனமும் வளமும் பெறுக நமது சிம்ப்ளிசிட்டியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...