உடுமலையில் திருமாவளவனின் 62வது பிறந்தநாள்: வி.சி.க வினர் மாணவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் வி.சி.க வினர் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



வி.சி.க துப்புறவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மாநில துணை செயலாளர் கு.விடுதலை மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் சித்ரா க.ராதா, ஆர்.தேன்மொழி, கே.ஜெயந்தி, அறிவொளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, பெதம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலை மணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பெதப்பம்பட்டி கார்த்திகேயன், கு.சக்திவேல், தேவிகா, சுமதி, ஜனிதா, ஹேமலதா, என்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...