கோவையில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து - சரக்கு ஆட்டோ மோதல்: பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்

கோவை குனியமுத்தூரில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து ஒன்று, கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே உள்ள ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே பாதையில் எதிர்திசையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, சாலையைக் கடக்க முயன்றது.

வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநர், சரக்கு ஆட்டோவை கவனித்ததும், உடனடியாக பிரேக் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். எனினும், பேருந்தின் பின்பகுதி சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது. இந்த மோதலில் சரக்கு ஆட்டோ சேதமடைந்தது.

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒருவழிப் பாதையில் விதிமுறைகளை மீறி வந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...