கோவையில் மாநில 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்

கோவையில் 5 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு மாநில 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முதல் துவங்கியது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை இறகுப்பந்து சங்கம் நடத்தும் தமிழ்நாடு மாநில 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பீளமேட்டில் உள்ள ராக்ஸ் அகாடமியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.



இந்த சாம்பியன்ஷிப் போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று ராக்ஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளருமான வெ.அருணாச்சலம், ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தியுடன் செய்தியாளர்களிடம் உரையாடினார்.

வெ.அருணாச்சலம் கூறுகையில், "இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மொத்தம 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்," என்றார்.

இந்த நிகழ்வை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனமான ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (AVANI) ஸ்பான்சர் செய்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ.3 லட்சம் எனவும், அது பிரிக்கப்பட்டு வெற்றியாளர்கள் முதல் காலிறுதிப் போட்டியாளர் வரையிலான 64 வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இறுதிப் போட்டிகள் வரும் 17 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். அதில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவரும் இந்திய இறகுப்பந்து சங்கத்தின் துணை தலைவருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் பேட்மிண்டனுக்கு பொது வசதிகள் இல்லாதது குறித்து கேட்கப்பட்டபோது, ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: "கோவையில் உள்ள இறகுப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான சங்கங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை 2 மாதங்களுக்கு முன்னர் சந்தித்தனர். அப்போது மாவட்டத்தில் விளையாட்டு துறைக்கு தேவையான வசதிகளுக்கான தகவல்கள் மற்றும் முன்மொழிவு அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 15 பேட்மிண்டன் மைதானங்கள் வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம். அவர்கள் கோவையில் வரவிருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு நிலத்தை ஒதுக்கியுள்ளனர், மேலும் அவர்கள் வேறு ஒரு இடம் ஒன்றையும் தேர்வு செய்து தருவதாக கூறியுள்ளனர்."

சில புகழ்பெற்ற கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்பு நிதி மூலம் பொதுவான இறகுப்பந்து வசதிகளுக்கான கோவையின் தேவைகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...