கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேச முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளேன் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் தொகுதி உட்கட்டமைப்பு குறித்து விவாதிக்க நேரம் கோரியுள்ளார்.


Coimbatore: கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழாவில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். விழா மேடையில் வானதி சீனிவாசனுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் கிளம்பிய முதலமைச்சர், வானதி சீனிவாசனை பார்த்தவுடன் அவருடன் சிறிது நேரம் மேடையில் பேசினார்.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, "தமிழ்ப்புதல்வன் நிகழ்வில் பங்கேற்றதற்கு முதல்வர் தனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் எனவும், இந்த கல்லூரி தன்னுடைய தொகுதியில் வருகின்றது என அவரிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவர் கண்டிப்பாக பேசலாம் என்று தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும், வரும் 18 ஆம் தேதி "கலைஞர்" நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்தார் எனவும், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர், நீங்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தன்னிடம் சொன்னதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...