கோவை உக்கடத்தில் ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை உக்கடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3.8 கிமீ நீளமுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் பாலக்காடு நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.



ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலம் 3.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த மக்களை நோக்கி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய மேம்பாலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...