கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

படக்குழுவினர் கூறுகையில், "இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தழுவியே இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்" என்றனர்.

மேலும், "இசையமைப்பாளர் சியாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை தந்துள்ளார். VFX தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது. VFX நன்றாக வருவதற்காகவே அதிக நாட்கள் எடுத்துக் கொண்டோம்" என்றும் தெரிவித்தனர்.

அதே நாளில் மற்ற படங்களும் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, "வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும்" என்றார்.

அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, "தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2062ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...