பொள்ளாச்சியில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் இளைஞர் கொலை - இருவர் கைது

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் 21 வயது இளைஞர் அரவிந்த்சாமி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். உடலில் காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி ஜே ஜே நகரைச் சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும், அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்சாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளிச் சென்றதாகவும், அப்போது வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்டதாகவும் தெரியவந்தது. ஆனால் அரவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப முயன்றபோது, விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...