கோவை பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் 43 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை பீளமேடு பகுதியில் தொழிலதிபர் மோனிஷ் ராஜனின் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜின் மகன் மோனிஷ் ராஜன் (27) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் மோனிஷ் ராஜன், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது தாயாருடன் தாராபுரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் பீளமேடு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...