மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்தினார்கள்.



விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள். 



விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...