போதைப் பொருள் மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனம் இளைஞர்களிடையே அதிகரிப்பு - கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'போதை இல்லா வளாகங்கள்' பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப் பொருள் மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனம் குறித்து பேசினார்.


கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 'போதை இல்லா வளாகங்கள்' (Drug Free Campuses) பேரணி பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழு உறுப்பினரும், ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் தலைவருமான அஜித்குமார் லால் மோகன் ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை வகித்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அஜித்குமார் லால் மோகன் பேசுகையில், "நீண்ட காலமாகவே நம் நாட்டில் இந்த போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இந்த போதைப் பொருள் புழக்கம் குறைவாகவே உள்ளது. போதைப் பொருட்களை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த கோரி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.



கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது உரையில், "தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை சம்பந்தப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் கோவையில் அத்தகைய குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.

அவர் மேலும், "போதைப் பொருள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு அடிமையாதல் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இவை இரண்டும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள். திரைப்படங்கள் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. அத்தகைய திரைப்படங்களில் இடம்பெறும் தவறான எடுத்துக்காட்டுகளும் சமூகத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மாணவர்கள் திரைப்படங்களில் காட்டப்படுவதை அப்படியே நம்பாமல் அது குறித்து யோசித்து செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.



இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...