கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி பணிகளை ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை அடைப்பு நீக்கம் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் இன்று (ஜூலை 30) நடைபெற்றன.

பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை மற்றும் ரேணுகாதேவி கோயில் முன்புறம் ஏற்பட்ட சாக்கடை அடைப்பை நீக்க ஏர் கம்ப்ரசர் ஆட்டோ பயன்படுத்தப்பட்டது.

இந்த பணியை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதே வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை, கோபால் நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தூய்மை பணியாளர்கள் கொசு புழுக்களை கண்டறிந்து அகற்றினர். பின்னர் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டிகளில் அபெட் மருந்து ஊற்றப்பட்டது. இந்த பணிகளையும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...