கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிட மாற்றம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் இரண்டு உதவி ஆய்வாளர்கள் குற்றச்சாட்டுகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அவர்கள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பார்வதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக யூசுப் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு அதிகாரிகளையும் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஜூலை 29 அன்று உத்தரவிட்டார்.

இந்த இரண்டு அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை முடிந்த பின்னர் இரு அதிகாரிகள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...