கோவையில் ஒன்றிய பட்ஜெட் புறக்கணிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து சனிக்கிழமை கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கே.சாமிநாதன் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் அதிக வரி செலுத்தும் மாநிலமான தமிழ்நாடு புறக்கணிப்பு, கோவை தொழில் துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு, கோவை மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்க மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்தனர். மேலும், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஜோதிமணி, ஜாகீர், மூர்த்தி, கோவை மாநகராட்சி மன்ற கவுன்சிலர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...