தெற்கு மண்டலம் 78-வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 78-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், நாடார் காலனி பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும், பொதுமக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்றும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவினையும், நாடார் காலனி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், நீர்கசிவை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...