அன்னூரில் 828 பயணாளிகளுக்கு ரூ.28.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால்

கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தில் வருவாய் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இவ்விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,

இப்பகுதி மக்கள் என்னிடம் அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை வழியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு பெற கருத்துரு அனுப்பியதோடு, தமிழக அரசு பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக 2017- 2018 நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள இதே பகுதியில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகள் மேற்கொள்ள ரூ.3523 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு பாசன வசதிகளை மேம்படுத்தப்படும்.

வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நிரந்தர தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக அவினாசிக்கு குடிநீர் வழங்க மூன்றாவது கூட்டு குடிநீர்த்திட்டம் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இத்திட்டப்பணிகளானது ஒன்றறை ஆண்டுகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இதுபோன்ற மக்களின் தேவைக்கான அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான நேரத்தில் செய்து தரப்படும்" என்றார்.



இன்று நடைபெற்ற விழாவில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னனு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை என மொத்தம் 828 பயணாளிகளுக்கு ரூ.27.23 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மேல்கதவக்கரை, காக்காப்பாளையம், நல்லக்கவுண்டம்பாளையம், அருவங்காடு நால்ரோடு, ஜிஆர்ஜி கல்லூரி ஆகிய குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் விதமாக 6 புதிய   வழித்தடங்களை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இ.கோவிந்த ராஜ், துணை மேலாளர் (வணிகம்) சாய் கிருஷ்ணன், அன்னூர் வட்டாட்சியர் ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...