நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024-25 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: 2024-25 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் நிவாரண நிதி, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மற்றும் ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா" என்ற பாடலும் பாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுக்காக முதல்வர் கேட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திராவிற்கும் பீகாருக்கும் நிதி ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை," என்று குற்றம்சாட்டினார்.



மேலும் அவர், "இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மோடி அரசு மாற்றான் தாய் மனநிலையோடு செயல்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது, அனைத்து கட்சிகளாலும் திட்டமிட்டு கருப்புக் கொடி காட்டப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...