உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வு மற்றும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகரச் செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர் ராஜன், பிரனேஷ், முருகேசன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...