தாராபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம் - 2.75 கோடி ரூபாய் நிதி வழங்க கோரிக்கை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தர்ணா போராட்டம். மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத 2.75 கோடி ரூபாய் நிதியை கோரி போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதியை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில மாதங்களாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த வாரம் பொதுமக்கள் ஆர்.டி.ஓ செந்தில் அரசனிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற்கு வரவேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை என்றும், இதனால் எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், "மக்களுக்கான பணிகளை செய்ய வளர்ச்சி கட்டணங்கள் வழங்கப்படாததால், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு எனது பஞ்சாயத்திற்கு வளர்ச்சி பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய வளர்ச்சி நிதியை வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...