திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவியுடன் தொடங்கியது. இது நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் வழங்குவாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த வாய்க்காலை வேர்கள் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிதி உதவியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் (TEA) அறக்கட்டளை வழங்குகிறது. இந்த வாய்க்கால் திருப்பூர் நகரத்தின் மைய பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கி, பளையக்காடு, கருமாரபாளையம், மண்ணரை வழியாக மூலிக்குளத்தை அடைகிறது.



இந்த தூர்வாரும் பணியால், நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்பணியின் தொடக்க விழா ஜூலை 21, 2024 அன்று காலை 9.30 மணிக்கு அணைக்காடு Check dam பகுதியில் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் K.M சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இப்பணிக்கு உதவி கோரியபோது, உடனடியாக ஒப்புதல் அளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் K.M சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...