சேலம் நாமக்கல் கரூர் சிறப்பு பயணிகள் ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம்

சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் எண் 06739- ஞாயிற்றுக் கிழமை சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 06.00, வந்தடையும் நேரம் 08.10.

ரயில் எண் 06740- ஞாயிற்றுக்கிழமை சேவை- கரூர்- சேலம்- புறப்படும் நேரம் 08.30, வந்தடையும் நேரம் 10.30.

ரயில் எண் 06743- தினசரி சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 11.30, வந்தடையும் நேரம் 13.30.

ரயில் எண் 06744 - தினசரி சேவை- கரூர்- சேலம் - புறப்படும் நேரம் 14.40, வந்தடையும் நேரம் 16.40

இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது. 

சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே தொடர இயலும். இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.

எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...