கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பல இடங்களில் அடை மழை பொழிந்து வருகின்றன.

இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டாக சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. இதன் அருகே ராஜவாய்க்கால் மூலம் பிரிக்கப்படும் தண்ணீர் கோவையின் முக்கிய குளங்களுக்கு செல்கிறது.



நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சித்திரைச்சாவடி அணைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நொய்யல் ஆற்று மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...