பொள்ளாச்சி கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பாதுகாப்பு குறித்து புகார்

பொள்ளாச்சி அருகே கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவியருவி, பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவியில் வறட்சி ஏற்பட்டு, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

தற்போது, கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



எனினும், தண்ணீர் கொட்டும் இடத்தில் தடுப்புக் கம்பிகள் உடைந்து காணப்படுவதால் உரிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், அருவியின் அருகே கடைகள் அமைக்க வேண்டும், பெண்கள் குளிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...