வாயில் காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டியானைக்கு ஆனைமலை சரணாலயத்தில் சிகிச்சை


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மூன்று வயதுடைய குட்டியானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில், 70 சதவிகிதம் குணமடைந்த குட்டியானை கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் காரமடை அருகேயுள்ள ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த குட்டி யானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும், ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் இருந்த பலாமரத்தில் பழம் உண்பதற்காக அந்த யானை முயற்சித்துள்ளது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த ஒரு குடியிருப்பு வாசிகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தநிலையில், கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டியானையை மையக்க ஊசி செலுத்தி கடந்த ஞாயிறன்று பிடித்தனர்.

தொடர்ந்து, டாப்சிலிப் ஆனைமலை புலிகள் சரணாலயம் வரகலியார் முகாமிற்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது கோவை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள யானை மிகவும் குட்டி. வனத்துறையினரால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதை கும்கி யானையாக பயிற்சியளிக்கலாமா அல்லது வனப்பகுதியிலேயே விடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார்.

Newsletter

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...