கோவை மாநகரில் மழை: தண்ணீர் தேக்கமின்றி இயல்பு வாழ்க்கை - உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

கோவையில் மிதமான மழை பெய்தும், நகராட்சி ஆணையரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தண்ணீர் தேக்கமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகரில் உக்கடம், சுங்கம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், டவுன் ஹால், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் தடையின்றி நடைபெற்று வருகிறது. வழக்கமாக மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் மழை நீர் தேங்கும் நிலை இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் M சிவகுருபிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை அத்தகைய நிலை ஏற்படவில்லை.



மழை நீர் வடிகால் பணிகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை நீர் தேங்காமல் வடிந்தோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மறுபுறம், கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் தின்பண்ட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் கிளம்பர் தனியாங்கி எனப்படும் நவீன கழிவு அகற்றும் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உக்கடம் பெரியகுளம் பகுதி விரைவில் தூய்மையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...